ஆஸ்துமாவுக்கு எளிய சித்த வைத்தியம்
ஜலதோஷம், காய்ச்சல், தலைவலியோடு இந்த குளிர்காலத்தில் இன்னொரு முக்கிய சவாலையும் எதிர்கொள்ள வேண்டும். அது... ஆஸ்துமா. நுரையீரலை பாதிக்கக்கூடிய நோய்களில் முக்கிய அங்கம் வகிக்கும் இந்த ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்களுக்காக வீட்டிலேயே பின்பற்றக்கூடிய சில எளிய மருத்துவமுறைகள் உண்டு.
பொதுவாகக் குழந்தை பருவத்திலும், வெகுசிலருக்கு நடுத்தர பருவத்திலும் பாதிக்கும் ஆஸ்துமாவை தமிழில் சுவாசகாசம் என்று அழைக்கிறார்கள். இந்த சுவாசகாசம் நாள்பட்ட நோயாக கருதப்படுகிறது. மேலும் இந்நோய் பரம்பரையில் யாருக்கேனும் இருந்தால் அவர் சந்ததியினருக்கும் வர வாய்ப்பு உள்ளது.
சுற்றுச்சூழலில் உள்ள ஒரு சில காரணிகளினால் தூசு, மாசு படிந்த காற்று, பூக்களில் உள்ள மகரந்தங்கள், புகை ஆகியவற்றாலும், மருந்துகளாலும், நாம் வசிக்கும் வீடுகளில் உள்ள சில காரணிகளாலும், ஏன் மேலும் நமக்கு ஒவ்வாத சில பொருட்களாலும், இவை ஏற்படும்.
Subscribe to:
Comments (Atom)